உள்நாட்டு செய்தி
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லத் திட்டமிடும் பெண்களுக்கு ஓர் அறிவிப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளிநாட்டு வேலைக்காகச் செல்ல விரும்பும் தாய்மார்களுக்கான பெண்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.2 – 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாடு செல்லும்போது அந்தந்த பிரதேச செயலகங்களால் வழங்கப்படும் DS4 ஆவணத்தை முன்வைக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களின் வேலை விண்ணப்பங்கள் உள்ளூர் கிராம சேவகர் அதிகாரி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நோட்டரி பப்ளிக் மூலம் சான்றளிக்கப்பட்டால் மட்டுமே DS4 ஆவணம் பெண்களுக்கு வழங்கப்படும்.மேலும், பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வி ஏற்பாடுகளை சான்றளிக்கும் ஆவணங்களையும் வழங்க வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.