உள்நாட்டு செய்தி
உயர்தர பாடங்களுக்காக ஆசிரியர்களை,ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை
உயர்தர பாடங்களுக்காக ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்காக அமைச்சரவையின் அங்கீகாரமும் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.அதன்படி, உயர்மட்ட கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள், வெளிநாட்டு மொழிப் பாடங்கள் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.
மாகாண மட்டத்தில் இதன் கீழ் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை 5450 ஆகும்.35 வயதுக்குட்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தகுதிகளைப் பெற்ற ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்னும் சில வாரங்களில் அழைப்பு விடுக்கப்படும்.