உள்நாட்டு செய்தி
அரிசி ஏற்றுமதிக்கு திடீர் தடை
உக்ரைன் தானிய ஏற்றுமதி ஒப்பந்தம் ரத்தாகி, பல நாடுகளுக்கு உணவு நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்தியா அரிசி ஏற்றுமதிக்கு திடீரென்று தடை விதித்துள்ளது.140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதிஇருப்பினும் குறிப்பிட்ட நாடுகளுக்கு இந்த ஏற்றுமதி தடையில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்லது. உலகின் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்தை கொண்டுள்ள இந்தியா சுமார் 140 நாடுகளுக்கு அரிசியை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக தாய்லாந்து, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா நாடுகள் அரிசியை பெருமளவில் ஏற்றுமதி செய்து வருகின்றன. கடந்த 2022ல் உலக அரிசி ஏற்றுமதி என்பது 5.54 கோடி டன்களாக இருந்தது.அதில் 2.22 கோடி டன்கள் இந்தியாவில் இருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாசுமதி அல்லாத அரிசி 1.8 கோடி டன்கள். இந்த 1.8 கோடி டன்னில் 1.03 கோடி டன் வெள்ளை அரிசி.
இதுவே தற்போது அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் உள்ளிட்ட அரிசி உணவை பயன்படுத்தும் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்றுமதி செய்யத் தடையில்லைஇது இவ்வாறிருக்க, உணவுப் பாதுகாப்புத் தேவைகளின்கீழ் இந்திய அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தடையில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, உணவுப் பாதுகாப்புக்கான தேவை உள்ள நாடுகள் என்ற அடிப்படையில் இந்திய அரசு எந்த நாடுகளுக்கெல்லாம் அனுமதியளிக்கிறதோ, அந்த நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதியை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை.மேலும், தடை உத்தரவு வெளியான காலகட்டத்தில் கப்பல்களில் ஏற்றப்பட்ட சரக்குகளை ஏற்றுமதி செய்வதற்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் பாஸ்மதி அரிசிக்கு திரும்புவார்கள் என இந்திய அரசாங்கம் கருதுகிறது.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்றே பெரும்பாலான மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் அரிசி ஏற்றுமதியில் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசியின் பங்கு 25% என்பது குறிப்பிடத்தக்கது.