உள்நாட்டு செய்தி
எரிபொருள் கையிருப்பு தொடர்பிலான அறிவித்தல்
அரசாங்கத்திடம் தற்போது போதிய எரிபொருள் கையிருப்பு இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இன்று (23) காலை 8.30 மணி நிலவரப்படி அரசாங்கத்திடம் 133,936 மெற்றிக் தொன் டீசலும் 6,192 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் .காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.கடந்த சில வாரங்களாக அரசாங்கத்தின் எரிபொருள் இருப்பில் சில குறைப்புக்கள் காணப்பட்ட போதிலும், அது மீளமைக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.