Connect with us

உள்நாட்டு செய்தி

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படவுள்ளது

Published

on

 ஆகஸ்ட் மாதம் முதல் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்கவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து திட்டமிட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, எரிபொருள் இறக்குமதி திட்டங்கள், சுத்திகரிப்பு செயற்பாடுகள், சுத்திகரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள், எரிபொருள் ஒதுக்கீடு மற்றும் களஞ்சியத்திறன் ஆகியன குறித்து  கலந்துரையாடப்பட்டதாக  அவர் கூறியுள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையங்களுடனான ஒப்பந்தங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.