உள்நாட்டு செய்தி
அம்பியூலன்ஸ் – பாடசாலை வேன் நேருக்கு நேர் மோதி விபத்து
அம்பியூலன்ஸ் வண்டி ஒன்றும், பாடசாலை மாணவர் சேவை வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் 6 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (20) காலை 6.20 மணியளவில் பலாங்கொடை இரத்தினபுரி வீதியில் உடவெல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த தியதலாவை இராணுவ முகாம் அம்பியூலன்ஸ் வண்டி பலாங்கொடை பிரதேச பாடசாலை மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்றுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்ந பாடசாலை மாணவர்களும், வேனின் சாரதியும் பலாங்கொட ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.