உள்நாட்டு செய்தி
மாமுனையிலிருந்து 35 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு
யாழ்ப்பாணம் மாமுனையில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டதேடுதல் நடவடிக்கையின் போது 35 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் போது கடற்படையினர் மாமுனையில் வீதியொன்றின் ஓரத்தில் கைவிடப்பட்டிருந்த 18 பொதிகளை சோதனையிட்டதில் சுமார் 35 கிலோ 900 கிராம் எடையுள்ள கேரள கஞ்சாவை கண்டுபிடித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 11 மில்லியன் ரூபாவாகும்.போதைப்பொருள் தொடர் சட்ட நடவடிக்கைகளுக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளது.