அரசியல்
13இல் அதிகாரங்களை குறைக்கும் அரசாங்கம்: தமிழ் தரப்புகளால் வலுக்கும் எதிர்ப்பு
இலங்கை ஜனாதிபதியின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பொலிஸ் அதிகாரங்களை குறைத்து வழங்குவதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது.
தமிழ் கட்சிகளுடனான சந்திப்பில், இலங்கை ஜனாதிபதி விக்ரமசிங்க பொறுப்புக்கூறல், அபிவிருத்தி, அதிகாரப்பகிர்வு தொடர்பான தனது திட்டங்களை கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனினும் அர்த்தத்துடன் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் விருப்பமின்மை இருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
13ஆவது திருத்தம் கொழும்பில் இருந்து ஒன்பது மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு தொடர்பான 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள இலங்கைச் சட்டமாகும்.
ஆனால் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
ஏற்கனவே அரசியலமைப்பில் உள்ளவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லையென்றால் அதுவே, 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று அர்த்தமுள்ள வகையில் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் விருப்பமின்மையின் வெளிப்பாடாகும் எம்.ஏ.சுமந்திரன் இந்திய ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.