Connect with us

அரசியல்

ரணில் விக்ரமசிங்கவுக்கு நேபாள பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

Published

on

நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலிக்கும் (KP Sharma Oli) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்றையதினம் (02) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

காத்மண்டு – பலுவட்டாரில் உள்ள நேபாள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நேபாளம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்கள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேபாள பிரதமர் செயலகத்தின் சார்பில், அதன் பிரதிநிதிகள் சபை உறுப்பினரும், தொழிலதிபருமான பினோத் சௌத்ரியும் கலந்துகொண்டிருந்தார்.

கடந்த 28ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேபாளம் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *