உள்நாட்டு செய்தி
கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கோடீஸ்வர வர்த்தகர் கைது
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்று முன்தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளுக்கு மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக அனுப்பும் நிறுவனத்தை கொழும்பில் நடத்தி வந்த கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதியும் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர் குறித்த யுவதிக்கு அறிவித்துள்ளார்.பொலிஸார் தீவிர விசாரணைஅவரின் அறிவிப்பின் பேரில் இளம் யுவதி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற நிலையில், சந்தேகநபரால் அறையொன்று முன்பதிவு செய்யப்பட்டு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து இளம் பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் முறைப்பாடு செய்த நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட யுவதி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதி தன்னுடன் விருப்பத்துடன் வந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.