Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பின் புறநகரிலுள்ள வீடொன்றில் ஆண், பெண்ணின் சடலங்கள் மீட்பு

Published

on

கொழும்பு புறநகர் பகுதியான கொஹுவளை பிரதேசத்தில் உள்ள அறை ஒன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மாடி வீடொன்றின் மேல்மாடி அறையில் தற்காலிகமாக தங்கியிருந்த ஆண் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து, அந்த அறையில் அவருடன் தங்கியிருந்த பெண்ணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கொஹுவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுபோவில வைத்தியசாலை வீதியில் தற்காலிகமாக தங்கியிருந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஹம்சர் குமார் என்ற 26 வயதான இளைஞன் மற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயான பாலசுப்ரமணியம் யோகேஸ்வரி என்ற 37 வயதான பெண் ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

குடியேறி இரு நாட்களில் உயிரிழப்புஉயிரிழந்த இருவரும் அந்த அறைக்கு 13ஆம் திகதி வந்ததாகவும், வீட்டு உரிமையாளரிடம், குறித்த பெண் பணிப்பெண் எனவும், ஆண் கூலித் தொழிலாளி எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குடியேறி 2 நாட்கள் கழித்து இருவரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த ஆண் தொழில் செய்யும் இடத்தில் சம்பள பணத்தை வாங்கி வருவதாக கூறிவிட்டு பிற்பகல் 2 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையின் போது, உயிரிழந்தவரிடம் பணம் கொண்டு வந்தீர்களா என கேட்ட போது அவர் தலையசைக்கவில்லை என கடந்த 15ஆம் திகதி குறித்த பெண் வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.ஆணின் மூக்கில் இருந்து இரத்தம் வருவதைக் கண்ட பெண் இதனை வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்ததாகவும், அவரின் அறிவித்தலின் பேரில் 1990 சுவசெரிய ஆம்புலன்ஸில் வந்த சுகாதார உதவியாளர்கள் அந்த நபரை பரிசோதித்து அவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸாருக்கு அறிவித்ததாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.வீட்டு உரிமையாளரின் வாக்குமூலம்இந்த நிலையில் நபரின் சடலம் சட்டப்படியான மனைவியிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில், நானுஓயா பிரதேச உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் கடந்த 16ஆம் திகதி வைத்தியசாலைக்கு வரவில்லை.

உயிரிழந்த பெண் வைத்தியசாலையில் இருந்து அவர் இருந்த அறைக்கு வந்துள்ளார். கடந்த 16ஆம் திகதி மதியம் ஒரு மணியளவில் தங்கியிருந்ததாகவும், உரிமையாளர் வழங்கிய வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வீட்டிற்கு வந்த பெண் நீண்ட நேரம் சத்தமில்லாமல் இருந்தாமையால், வீட்டின் உரிமையாளர் பெண்ணின் அறைக்கு சென்று ஜன்னல் வழியாக பார்வையிட்ட போது அந்த ​​பெண் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *