உள்நாட்டு செய்தி
டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மீண்டும் ஆரம்பம்
எதிர்வரும் வியாழக்கிழமை (13) முதல் நாடளாவிய ரீதியில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய தினங்களில் இந்த வேலைத்திட்டம் அமுலில் இருக்கும் என அதன் பணிப்பாளர் கலாநிதி நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.முப்படையினரின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.நாட்டில் இதுவரை 51,477 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.50 வீதமானவர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.