உள்நாட்டு செய்தி
சரத் வீரசேகரவின் கருத்தைக் கண்டித்து நாளை கண்டனப் போராட்டம்
சரத் வீரசேகரவிற்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் அடையாளக் கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இந்தப் போராட்டமானது நாளைய தினம் (11.07.2023) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு நீதிமன்ற முன்றிலில் முன்னெடுப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் நீதிபதிகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி இன்றைய தினம் (10.07.2023) முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் ஏகமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
இந்தக் கண்டனப் போராட்டத்தில் வடக்கு மாகாண இதர சட்டத்தரணிகள் சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.