உள்நாட்டு செய்தி
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை
ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை(06.07.2023) மற்றும் நாளை மறுதினம்(07.07.2023) ஆகிய நாட்களில் இவ்வாறு ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.