உள்நாட்டு செய்தி
அத்தனகலு ஓயாவிலு காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு
அத்தனகலு ஓயாவில் விழுந்து காணாமல் போன யுவதி உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் முதல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது இன்று காலை யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.நீரோடையில் விழுந்த யுவதியின் உடல் சுமார் 500 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.நேற்று பிற்பகல் அத்தனகலு ஓயாவில் நீர்மானி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் செல்பி புகைப்படம் எடுக்கச் சென்ற இந்த யுவதி, நீரில் விழுந்து காணாமல் போயுள்ளார்.கொழும்பு குணசிங்கபுர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய பாத்திமா பஸ்லா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.