உள்நாட்டு செய்தி
நாட்டின் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியம்
நாட்டின் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக ஶ்ரீ சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.களுத்துறையில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.பாரியளவு மோசடிகள்டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், நாட்டின் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதுடன், உயிர் காப்பு மருந்து வகைகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இதேவேளை, மருந்துப் பொருள் கொள்வனவில் பாரியளவு மோசடிகள் இடம்பெற்று வருவதாக மருத்துவதுறைசார் தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது