உள்நாட்டு செய்தி
மின் கட்டணத்தை 25% குறைக்க நடவடிக்கை
மின் கட்டணத்தை 25 வீதத்தால் குறைக்க வேண்டும் என மின்சார பாவனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணம் 14.2 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
30 வரையான மின் அலகுகளை பயன்படுத்துவோருக்கான கட்டணம் 65 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பிரிவில் ஒரு அலகு 30 ரூபாவில் இருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாவனையாளர்களுக்கான கட்டணம், 400 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
60 அலகுகளுக்கு குறைவான பாவனையாளர்களுக்கு ஒருஅலகிற்கான கட்டணம் 42 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதுடன் , மாதாந்த கட்டணம் 650 ரூபாவில் இருந்து 300 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
91 அலகுகள் முதல் 120 அலகுகள் வரை பயன்படுத்துவோரின் ஒரு அலகிற்கான கட்டணம் 42 ரூபாவில் இருந்து 35 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
கைத்தொழில் துறைக்கு 9 வீதம் மின்சாரக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்த நிலையிலேயே, 14.2 வீத குறைப்பு போதாது எனவும், 25 வீதம் மின் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.