உள்நாட்டு செய்தி
ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ள முக்கிய அறிவிப்பு
ரயிலில் பயணிகள் பயணச்சீட்டின்றி பயணிப்பதால் அதிக நட்டம் ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இவ்வாறு பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்காரணமாக ரயில் பயணச்சீட்டு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் டி. எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ரயில் பயணச்சீட்டு சோதனை நடவடிக்கையின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயணச்சீட்டின்றி பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பயணம் மேற்கொண்டவர்களிடமிருந்து மூவாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் பயண கட்டணம் இரு மடங்காக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில்வே திணைக்களத்திற்கு மாதாந்தம் ஆயிரம் கோடி ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றாலும் , வருமானம் முழுவதும் எரிபொருள் செலவிற்கு பயன்படுத்தப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக பஸ் கட்டணத்தை விட 75 வீதம் ரயில் பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.