Connect with us

உள்நாட்டு செய்தி

நீண்ட வங்கி விடுமுறை அறிவிப்பு

Published

on

இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட வங்கி விடுமுறையை வழங்கி மேற்கொள்ளவிருக்கும் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் நிலவும் குழப்பத்தை களைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், நாட்டில் உள்ள அனைத்து மற்றும் தனியார் வங்கிகளும் எந்த நெருக்கடியும் இல்லை மற்றும் வலுவாக இயங்குகின்றன. எனவே, இந்த நாட்டின் வாடிக்கையாளர் சமூகம் எந்த அச்சமும் கொள்ள வேண்டாம் என இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் சன்ன திஸாநாயக்க அறிவித்துள்ளார். 

ஜூன் 30ஆம் திகதி வங்கி விடுமுறை தினமாக பிரதமரும், அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு என்ற வேலைத்திட்டத்திற்கு கால அவகாசம் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கம் மற்றும் நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து இந்த விடுமுறையை அறிவித்ததாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்திருந்தார்.