Connect with us

உள்நாட்டு செய்தி

அஸ்வெசும தொடர்பான மேன்முறையீடுகளை முன்வைக்க விசேட கருமபீடங்கள்

Published

on

அஸ்வெசும நலன்புரி நிவாரணத் திட்டம் தொடர்பான ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை முன்வைப்பதற்காக இன்று(28) முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் விசேட கருமபீடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்காக தனியாக குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர் கமல் பத்மசிறி தெரிவித்துள்ளார். 

கடந்த 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில், 2 இலட்சத்திற்கும் அதிகமான மேன்முறையீடுகள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.