Connect with us

உள்நாட்டு செய்தி

சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம்

Published

on

சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பிரதான காரணம் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போதுள்ள அச்சிடும் இயந்திரங்களின் போதிய அச்சிடும் திறன் இல்லாததே என அதன் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,இவ்வாறான குறைபாடுகள் இருப்பது நாம் அறிந்ததே. அந்த வகையில், சாரதி அனுமதி அட்டை அச்சிடும் இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் அனுப்பப்பட்டுள்ளது.  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது ஐந்து இயந்திரங்கள் மாத்திரமே அச்சிடுவதோடு, அவை தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்று ஆணையர் ஜெனரல் கூறினார்.அட்டைகள் இல்லாததாலும், போதிய அச்சு இயந்திரங்கள் இல்லாததாலும் மொத்தம் 800,000 அட்டைகள் வழங்குவது இன்னும் நிலுவையில் உள்ளது என்றார்.மேலும், இத்துறை நாளொன்றுக்கு, 4,000 அட்டைகளை அச்சிடுவதாகவும் அவர் தெரவித்தார்.தற்காலிக சாரதி அனுமதி அட்டை வழங்குவதை நிறுத்த வேண்டுமானால், நாளொன்றுக்கு 4,000 அட்டைகளுக்கு மேல் அச்சிட வேண்டும்,” என ஆணையர் மேலும் தெரிவித்தார்.