உள்நாட்டு செய்தி
காணாமல் போன 2 பாடசாலை மாணவிகள் -பொலிஸார் விசாரண ஆரம்பம்
அம்பாறை, இங்கினியாகலை பொல்வத்த பகுதியில்லுள்ள பாடசாலை மாணவிகள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நண்பிகளான இரு மாணவிகளும் 16 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவி ஒருவர் பாடசாலைக்கு செல்வதாக கூறிவிட்டு மற்றைய மாணவியின் வீட்டிற்கு கடந்த 15ம் திகதி சென்றுள்ளார்.
அதன்படி அன்றைய தினம் காலை பாடசாலை மாணவிகள் இருவரும் தாங்கள் பயிற்சி வகுப்புக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த சிறுமிகள் இருவரும் வீடு திரும்பாதமை தொடர்பில் சிறுமி ஒருவரின் பாட்டி இங்கினியாகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் இங்கினியாகல பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதற்கிடையில், மாணவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறிய மறுநாள், மற்றொரு நண்பருக்கு போன் செய்து, இருவரும் கொழும்பில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த தொலைபேசி அழைப்பின் ஊடாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட நண்பரிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.