உள்நாட்டு செய்தி
தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பதவி விலகல் ஜனாதிபதி காரணமா?
ஜனாதிபதி ரணிலுடனான வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சில நாட்களுக்குப் பின்னர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் கையளித்ததாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது. பதவி விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.தொல்பொருள் இடமொன்றுக்கு காணிகளை வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பணிப்பாளர் நாயகத்தை கடுமையாக சாடியுள்ளார்.ஜனாதிபதி அவரிடம் “நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?” என ஜனாதிபதி இதன் போது அவரிடம் தெரிவித்துள்ளார்.