உள்நாட்டு செய்தி
ஓமான் யூரியா உரம் இன்று முதல் விநியோகம் ..!
ஓமானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை யூரியா உரம் இன்று முதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதுஇன்று முதல் விவசாய சேவை நிலையங்கள் மூலம் உரம் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.ஓமானில் இருந்து யூரியா உரக் கப்பல் ஒன்று நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுஇதனூடாக 22 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் யூரியா உரம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுஇதேவேளை, 11 ஆயிரத்து 250 மெற்றிக் தொன் யூரியா உரக்கப்பல் ஒன்று எதிர்வரும் சில நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.இதுனூடாக சிறு போகத்திற்கான யூரியா உர தேவை பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் சிறு போகத்திற்கு தேவையான TSP உரங்கள் கையிருப்பில் காணப்படுவதுடன் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.