Connect with us

உள்நாட்டு செய்தி

26 பேருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு.

Published

on

இன்று மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட்ட 26 பேருக்கு கொழும்பு, பிரதான நீதிவான் நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.கொழும்பு, ராஜகிரிய தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு முன்பாக தேசிய மக்கள் சக்தியினர் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பதை தடுக்கும் வகையிலேயே இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 106 (01) பிரிவின்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, கட்சியின் உறுப்பினர்களான விஜித ஹேரத், லால்காந்த, டில்வின் சில்வா, சுனில் ஹந்துனெத்தி மற்றும் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை வீதி, நாவல வீதி மற்றும் தேர்தல் காரியாலயத்தின் அணுகு வீதிகள் உள்ளிட்ட பல வீதிகளில் போராட்டம் நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தியினர் இன்று மாலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.