Connect with us

உள்நாட்டு செய்தி

வசந்த முதலிகே கைது

Published

on

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே சற்றுமுன் கிரிபத்கொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினரின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பெயரில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று -18- இடம்பெற்ற மாணவர் போராட்டத்தின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்கள் தீபங்களை ஏந்தியவாறு பல்கலைக்கழக மைதானத்தில் இருந்து கொழும்பு – கண்டி வீதியை நோக்கி பேரணியாக சென்றதையடுத்து, அங்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது