அரசியல்
சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி ஏகமனதாக தீர்மானம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியின் மூலம் முன்வைக்க ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எந்தவொரு விடயத்திலும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதில்லை என தீர்மானித்துள்ளது.இதேவேளை .ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, டயானா கமகே மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் தொடர்பில் கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளது. பௌசியின் கட்சி உறுப்புரிமையையும் இடைநிறுத்துவதற்கு செயற்குழு தீர்மானித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.