Connect with us

உள்நாட்டு செய்தி

கைதிகளை சந்திக்க விசேட சந்தர்ப்பம்!

Published

on

வெசாக் தினத்தினை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 15 கைதிகள் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று வெசாக் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியாக 988 சிறைகைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

அதற்கமைய வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து சிறுகுற்றங்களை புரிந்த மற்றும் தண்டப்பணத்தினை செலுத்த முடியாத 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

அவர்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இதேவேளை நேற்று (05) மற்றும் இன்று (06) ஆகிய தினங்களில் சிறைக்கைதிகளை சந்திப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.