உள்நாட்டு செய்தி
இந்திய பெற்றோலிய அமைச்சின் அதிகாரிகள் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக தகவல்
இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சின் செயலாளர் பங்கஜ் ஜெயின் மற்றும் இந்தியன் பெற்றோலிய நிறுவனத்தின் தலைவர் ஷிர்காந்த் மாதவ் வைத்யா ஆகியோர் இன்று இலங்கைகு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன,
இவர்கள் தமது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது,
இவர்கள் இந்த விஜயத்தின் போது திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அமைந்துள்ள பகுதிக்குகும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்,.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் செயல்பாடுகளை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மேற்பார்வையிடுகிறது.
கடந்த ஆண்டின் முற்பகுதியில், லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இலங்கை பெட்ரோலி கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து திருகோணமலை எண்ணெய்த் தாங்கிகளை மையப்படுத்தி டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது,
அத்துடன் லங்கா ஐஓசி நிறுவனம் நாட்டில் மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை புதிதாக ஆரம்பிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது