Connect with us

உள்நாட்டு செய்தி

தலைவராக நியமிக்கப்பட்ட ஹிருணிகா! 

Published

on

அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கத்தின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.தனியார் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊழியர்களின் தொழில்முறை உரிமைகளுக்காக முன்வருதலுக்கும், அவர்களை வலுவூட்டுவதற்கும் பலப்படுத்துவதற்கும் அகில இலங்கை ஐக்கிய தனியார் ஊழியர் சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதோடு, ஹிருணிகா பிரேமச்சந்திர அதன் முதலாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டதோடு, உரிய நியமனக் கடிதத்தை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கலந்து கொண்டார்.