Connect with us

அரசியல்

341 ல் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு

Published

on

341 ல் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது!341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.தாமதமாக தேர்தல் நடத்தப்பட்ட எல்பிட்டிய உள்ளுராட்சி சபை மாத்திரம் இன்னும் பதவியில் உள்ளது.2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் நான்கு வருடங்களாக உள்ளூராட்சி நிர்வாகம் இயங்கி வந்த போதிலும், கடந்த வருடத்தின் நிலைமை காரணமாக, அதன் உத்தியோகபூர்வ காலம் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டது.எவ்வாறாயினும் உள்ளுராட்சி சட்டத்தின் பிரகாரம் இன்றைக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தி புதிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும்.ஆனால் அன்றைய திகக்கு முன்னதாக வாக்குப்பதிவு நடத்த முடியாத காரணத்தால் இன்று நள்ளிரவுடன் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் முடிவடைகிறது.