உள்நாட்டு செய்தி
16 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 16 இந்திய மீனவர்களும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் கடற்பரப்பில் 4 மீனவர்களும் பருத்தித்துறை கடற்பரப்பில் 12 மீனவர்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீனவர்களுடன் அவர்களின் அரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டித்துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு நீரியல் வளத்துறை திணைக்களத்திடம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
12 மீனவர்கள் பருத்தித்துறை நீதிமன்றிலும் 4 மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.