உள்நாட்டு செய்தி
சட்டவிரோத அந்நிய செலாவணி பரிமாற்றல் நிறுவனங்களிலும், டொலரின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி
சட்டவிரோதமாக அந்நிய செலாவணி பரிமாற்றம் இடம்பெறும் நிறுவனங்களில், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவுப் பெறுமதி 270 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது வலுவடைந்து வருவதால் வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்வதில் தரகர்கள் தயக்கம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உண்டியல் மற்றும் ஹவாலா முறைகளில் பணப்பரிமாற்றம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையில், அடுத்த மாதமளவில் எரிபொருட்களின் விலையும் குறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன