உள்நாட்டு செய்தி
மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை
மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது.
அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர கண்காணிப்பு (AQM) நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவிட்சர்லாந்தின் காற்றின் தர தொழில்நுட்ப நிறுவனமான IQAir இன் புள்ளிவிவரங்கள் படி யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் 155 ஆக பதிவாகியுள்ளமையை வெளிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும் நுவரெலியா, நீர்கொழும்பு, தம்புள்ளை, அம்பலாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கம்பஹா பகுதிகளில் காற்றின் தரம் மிதமான மட்டத்தில் காணப்பட்டதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.
காற்றின் மாசு சுட்டெண் 100 க்கும் அதிகமாக இருந்தால், சிறுவர், முதியோர் மற்றும் சுவாசக்கோளாறு உடையோருக்கு ஆபத்தானது எனவும், அவ்வாறானவர்கள் முகக்கவசம் அணிவது பாதுகாப்பானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.