உள்நாட்டு செய்தி
ரோஹிங்ய அகதிகள்

பங்களாதேஷின் தென் கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள ரோஹிங்ய அகதிகள் முகாமொன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இரண்டாயிரம் தங்குமிடங்கள் தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இது தொடர்பான விசாரணைகள் பங்களாதேஷ் அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சுமார் 12000 பேர் தங்குமிடங்களை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர்.
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமாக கருதப்படும் இந்த முகாமில் நேற்று தீ பரவியது.
தீ பரவியமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.
மியன்மாரில் இருந்து இடம்பெயர்ந்த ரோஹிங்ய அகதிகள் அதிகளவில் தங்கியுள்ள இடமாக குறித்த முகாம் காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.