உள்நாட்டு செய்தி
பாராளுமன்றத் தேர்தலின் மூலம் மட்டுமே ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியும்: ஜனாதிபதி
மக்களால் தெரிவு செய்யப்படும் பாராளுமன்றத் தேர்தல் மூலம் மாத்திரமே அரசாங்கத்தை மாற்ற முடியும் என்றும் வீதிகள் அதற்கு மாற்றுவழியல்ல என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை, வான்படை முகாமில் கெடட் அதிகாரிகள் உள்ளிட்ட வான்படை அதிகாரிகள் வெளியேறும் அணிவகுப்பில் பங்கேற்ற ஜனாதிபதி, அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்திற்கு விரைவில் சாதகமான முடிவு என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.