அரசியல்
உள்ளூராட்சித் தேர்தல் 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்படும் வாய்ப்புகள் – பெவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு !
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சகல செயற்பாடுகளும், சட்டத்துக்கு அப்பால் சென்று தேர்தலை காலந்தாழ்த்தும் வகையிலேயே அமைந்துள்ளன. அதேபோன்று, தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்காலங்களில் சட்ட ஏற்பாடுகளை அடிப்படையாகக்கொண்டு தேர்தலை நடத்தவிடாமல் செயற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றனஅதற்கமைய, இன்னும் இரு வருடங்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பெவ்ரல் அமைப்பு) தெரிவித்துள்ளது.எனவே, அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு இடமளிக்காமல், தேர்தலை நடத்துவது குறித்து இருக்கும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைக்க சகல அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்வதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பாராளுமன்றத்துக்கே நிதி தொடர்பான அதிகாரம் இருக்கிறது. இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெளிவான உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார். தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் யோசனையொன்றை நிறைவேற்றுமாறும் அவர் அறிவித்திருந்தார். நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கான அதிகாரத்தை உதாசீனப்படுத்தி, தேர்தலுக்கான நிதியை விடுவிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து காலந்தாழ்த்தி வருகிறார்
மீளாய்வுக் குழுவும், எல்லைநிர்ணய அறிக்கையும் தேர்தலை அடியொட்டி நிச்சயமாக முன்னெடுக்கப்படலாம். மீளாய்வுக் குழுவின் செயற்பாடுகள் காலந்தாழ்த்தப்படலாம். மேலும், மீளாய்வு செயற்பாடுகளின்போது தேர்தல் முறைமை மாற்றியமைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்படலாம்.
இதுவரையில் சட்டத்துக்கு அப்பால் காலந்தாழ்த்தப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், சட்டத்தினூடாக மேலும் இரு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கான செயற்பாடுகள் இதனூடாக முன்னெடுக்கப்படலாம். இவ்வாறானவொரு நிலைமையே தெளிவாக தெரிகிறது.
அநீதியான முறையில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக சகல மக்களும் ஒன்றுபடவேண்டும். அதேபோன்று, தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாற்றுத் தெரிவுகள் எதுவும் இல்லை. தேர்தலை நடத்துவதற்காக இன்னுமொரு திகதியை ஆணைக்குழு அறிவித்தாலும், மீண்டும் தேர்தல் காலந்தாழ்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு பேரவைக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு இருக்கின்றன.
அதற்கமைய, இன்னும் இரு வருடங்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பெவ்ரல் அமைப்பு) தெரிவித்துள்ளது.எனவே, அரசாங்கத்தின் இந்த முயற்சிகளுக்கு இடமளிக்காமல், தேர்தலை நடத்துவது குறித்து இருக்கும் நடைமுறை பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் யோசனையொன்றை முன்வைக்க சகல அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பரிந்துரை செய்வதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பில் நேற்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,பாராளுமன்றத்துக்கே நிதி தொடர்பான அதிகாரம் இருக்கிறது. இதுதொடர்பில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெளிவான உரையொன்றையும் நிகழ்த்தியிருந்தார். தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாவை விடுவிக்கும் யோசனையொன்றை நிறைவேற்றுமாறும் அவர் அறிவித்திருந்தார். நிதி அமைச்சர் பாராளுமன்றத்துக்கான அதிகாரத்தை உதாசீனப்படுத்தி, தேர்தலுக்கான நிதியை விடுவிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்து காலந்தாழ்த்தி வருகிறார்.
அதனால், பாராளுமன்றத்துக்கு இருக்கும் நிதி அதிகாரம் தொடர்பில் மீண்டும் வலுவாக்குவதற்காக, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரசியல் கட்சிகளும் உறுப்பினர்களும் ஒன்றிணைந்து யோசனையொன்றை முன்வைக்க வேண்டும்.மார்ச் மாதம் 20ஆம் திகதியாகும்போது உள்ளூராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் நிறைவடைகின்றது. அதன் பின்னர் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரிகளின் வசமாகிவிடும். மாகாண சபைகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலைமையே நிலவுகிறது. அதேபோன்று, பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. அவ்வாறாயின், ஆட்சி செயற்பாடுகள் தனி நபரொருவரை மையப்படுத்தி அமைந்துவிடும். திட்டமிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் காலந்தாழ்த்தப்பட்டால், மீண்டும் வேட்புமனுத் தாக்கலொன்றை நடத்துவதற்கான சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கிவிடும். அதேபோன்று, எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவு செய்து, அந்த அறிக்கையின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கலை மேற்கொள்ளும் சூழ்நிலையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. திகதி குறிப்பிடப்படாமல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலந்தாழ்த்தப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மீளாய்வுக் குழுவும், எல்லைநிர்ணய அறிக்கையும் தேர்தலை அடியொட்டி நிச்சயமாக முன்னெடுக்கப்படலாம். மீளாய்வுக் குழுவின் செயற்பாடுகள் காலந்தாழ்த்தப்படலாம். மேலும், மீளாய்வு செயற்பாடுகளின்போது தேர்தல் முறைமை மாற்றியமைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்படலாம்.இதுவரையில் சட்டத்துக்கு அப்பால் காலந்தாழ்த்தப்பட்டு வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல், சட்டத்தினூடாக மேலும் இரு வருடங்களுக்கு ஒத்திவைப்பதற்கான செயற்பாடுகள் இதனூடாக முன்னெடுக்கப்படலாம். இவ்வாறானவொரு நிலைமையே தெளிவாக தெரிகிறது.அநீதியான முறையில் மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுவதற்கு எதிராக சகல மக்களும் ஒன்றுபடவேண்டும். அதேபோன்று, தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு மாற்றுத் தெரிவுகள் எதுவும் இல்லை. தேர்தலை நடத்துவதற்காக இன்னுமொரு திகதியை ஆணைக்குழு அறிவித்தாலும், மீண்டும் தேர்தல் காலந்தாழ்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.பாராளுமன்றத்தின் அரசியலமைப்பு பேரவைக்கு இருக்கும் அதிகாரத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது. ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு இருக்கின்றன.
ஆனால், ஜனாதிபதி கூறுவதுபோன்று அவருக்கு இந்தவிடயத்தில் அதிகாரம் எதுவும் இல்லை. ஆணைக்குழுக்களுக்கு தான் உறுப்பினர்களை நியமிப்பதாக ஜனாதிபதி சபையில் அறிவித்திருந்தார். அவரின் கருத்து தவறானதாகும். துரதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதியின் கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்ட சபையில் யாரும் இருக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும் என்றார்.