உள்நாட்டு செய்தி
போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் விஷேட அதிரடி படையினரால் கைது
பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த 145 போதை வில்லைகளுடன் பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் கைது
பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியர் ஒருவர் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் காப்சூல்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் பதுளையில் தனது தனியார் மருத்துவமனையில் பாடசாலை மாணவர்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
அதன்படி, பதுளை பகுதியில் காரில் பயணித்துகொண்டிருந்த வைத்தியரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.
செல்லுபடியாகும் உரிம பத்திரம் இல்லாமல் 145 போதை மருந்து உட்செலுத்தப்பட்ட காப்ஸ்யூல்கள் மருத்துவரிடம் இருப்பதை அதிரடிப்படையினர் கண்டறிந்துள்ளனர்.
குறித்த வைத்தியர் இன்று பெப்ரவரி 15 ஆம் திகதி பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.