உள்நாட்டு செய்தி
குறைந்த வருமானம் பெறும் எந்தவொரு குடும்பத்தையும் தவறவிட வேண்டாம்

- மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இருபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்படும்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி பெற்றுக் கொடுக்கும் வேலைதிட்டத்தின்போது தேவையுடைய எவரையும் தவறவிட வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, 28 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு (2,850,000) அரிசி பெற்றுக் கொடுப்பதற்காக ஆகக்கூடியது 20 பில்லியன் ரூபாவுக்காயினும் போதுமானளவு நெல்லை கொள்வனவு செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
நெல் கொள்வனவு செய்வது தொடர்பில் இன்று (14) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.