உள்நாட்டு செய்தி
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் இலங்கைக்கு ஆதரவு
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வரவு செலவு திட்டத்தில் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை சேர்ப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர்கள் மேற்படி குறிப்பிட்டனர்.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் நிலைபேண்தகு பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் ஆனந்த மலவிதந்திரி ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதிநிதிகளாக அதன் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota, வரவு செலவுத் திட்ட ஆலோசகர் Asif Shah, ஒருங்கிணைப்பு நிபுணர் துலானி சிறிசேன, கொள்கை, ஆராய்ச்சி மற்றும், இணைப்பு உதவியாளர் Afraa Mohamed ஆகியோர் பங்குபற்றினர்.
நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை, பொது நிதி முகாமைத்துவ முறைமைகளுடன் ஒருங்கிணைப்பது தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் அபிவிருத்தி இலக்குகள் மற்றும் வரவு செலவுத்திட்டத்தின் முக்கிய நன்மைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.