உள்நாட்டு செய்தி
24 வயதுடைய இளம் போதை வியாபாரி கைது
மட்டக்களப்பு அரசடியைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் போதை வியாபாரி நேற்று (02) ஏறாவூர் சவுக்கடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய களுவாஞ்சிக்குடி விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த போதைப்பொருள் வாழைச்சேனைப் பிரதேசத்திற்கு விநியோகிக்கப்படவிருந்த நிலையிலேயே இவரிடமிருந்து 5 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் இவற்றைக் கொண்டு செல்லப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைக்காக ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.