உள்நாட்டு செய்தி
கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவம்
இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 4,500 இலங்கை பக்தர்களும், 3,500 ஆயிரம் இந்திய பக்தர்களும், ஆயிரம் அரச அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பெற்றதோடு இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின் இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம்தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது.