Connect with us

உள்நாட்டு செய்தி

பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம்

Published

on

பசுமையான இலங்கையை உருவாக்கும் பொறுப்பை இளைஞர்களிடம் கையளிப்பதன் மூலம் 75வது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவின்படி முன்னெடுக்கப்படும் ‘ தேசிய இளைஞர் தளம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இளைஞர் பாராளுமன்றம் என்பன ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

முதற்தடவையாக இலங்கையின் அனைத்துப் பிரதேச செயலாளர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட நகரமொன்று . இந்த வேலைத்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக தூய்மைப்படுத்தப்படும்.

இதற்கமைய பெப்ரவரி 03 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் 335 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 50,000 இளைஞர் யுவதிகளின் பங்களிப்புடன் தெரிவு செய்யப்பட்ட நகரத்தை தூய்மைப்படுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.