Connect with us

உள்நாட்டு செய்தி

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம்

Published

on

அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற அதிகாரிகளுக்கான மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.2023 ஆம் ஆண்டுக்கான அரசின் புதிய வரி வருமானங்கள் தொடர்பான முன்மொழிவுகள் அமுலாக்கம் செய்வதற்கு ஆரம்பித்துள்ளதுடன், அதன்மூலம் வருமானம் திரட்டுவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் எடுப்பதால், அரச நிதிப்பாய்ச்சல் வரையறைகளுக்குப் பொருத்தமான வகையில் ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒருசில மாதங்கள் அரச செலவினங்களை முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளது.அதற்கமைய, பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்தில் செலுத்துவதற்கும், பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை குறித்த சில தினங்களுக்குப் பின்னர் செலுத்துவதற்கும், திறைசேரியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.