Connect with us

Sports

இலங்கை அணி அபார வெற்றி

Published

on

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று மைதானத்தில் இடம்பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது

அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 56 குசல் மென்டிஸ் 52 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் சரித் அசலங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் உம்ரான் மலிக் 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 207 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 190 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்ப்பில் அக்‌ஷர் பட்டேல் 65 ஓட்டங்களையும் சூர்யகுமார் யாதவ் 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் தசுன் சானக, கசுன் ராஜித மற்றும் தில்ஷான் மதுசங்க ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.