Sports
சவூதி சட்டத்தை மீறும் ரொனால்டோ
சவூதி அரேபியாவில் உள்ள சிறப்பு சட்டத்தை மீறியதால் போர்ச்சுகல் நாட்டின் சிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது உலகின் கவனம் தற்போது குவிந்துள்ளது. ரொனால்டோ மற்றும் அவரது துணை ஜோர்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் ஒன்றாக உள்ளனர், ஆனால் அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை.சூப்பர் கால்பந்து வீரர் ரொனால்டோ சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளதால்தற்போது சவூதி அரேபியாவில் தங்கியுள்ளார்.. சவுதி அரேபிய சட்டத்தின்படி, திருமணமாகாத தம்பதிகள் ஒரே வீட்டில் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.எனினும் ரொனால்டோ இந்த சட்டத்தை மீறினாலும் சவுதி அரசால் தண்டிக்கப்பட மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2025 ஆம் ஆண்டு வரை அல் நாசர் விளையாட்டு கழகத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இதன்படி கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆண்டு சம்பளம் 177 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள். மேலும் இது கால்பந்து வரலாற்றில் ஒரு வீரர் பெறும் அதிக சம்பளமாகும்.