Sports
இந்திய அணிக்கு 207 ஓட்டங்கள் இலக்கு
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 சர்வதேசப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித்தலைவர் ஹர்திக் பாண்டியா இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார். இலங்கை அணிக்கு பாத்தும் நிசாங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் வெற்றிகரமான தொடக்கத்தை வழங்கினர். இருவரும் 8.2 ஓவரில் 80 ஓட்டங்களைப் பெற்றனர். மெண்டிஸ் 52 ஓட்டங்களில் முதல் விக்கெட்டாக ஆட்டமிழந்தார். பதும் நிசங்க 33 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால் இலங்கையின் மத்திய வரிசை மீண்டும் சொதப்பியது. பானுக ராஜபக்ச 02 ஓட்டங்களிலும், தனஞ்சய சில்வா 03 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர், சரித் அசங்க 19 பந்துகளில் 37 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார். இதில் 6கள் 4 அடங்கும். இந்திய வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை இலங்கை அணித் தலைவர் தசுன் ஷனகா சரமாரியாக தாக்கினார். மாலிக் வீசிய 4 ஓவர்களில் இலங்கை அணி வீரர்கள் 48 ரன்கள் எடுத்தனர். மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தசுன் ஷனக 22 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 56 ஓட்டங்களைப் பெற்றார். இதில் 6 6ஓட்டங்கள் அடங்கும். சமிக கருணாரத்ன ஆட்டமிழக்காமல் 11 ஓட்டங்களை பெற்றார். அதன்படி இந்திய அணிக்கு 207 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.