உள்நாட்டு செய்தி
அத்தியவசியப் பொருட்களின் விலை குறைப்பு
இன்று முதல் 05 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதன்படி, 01 கிலோ சிவப்பு பருப்பின் விலை ரூ. 4 மற்றும் உள்ளூர் டின் மீன் 01 கேன் விலை ரூ. 5, 01 கிலோ வெங்காயத்தின் விலை ரூ. 9 ஆகவும், 01 கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 15 ஆகவும், 01 கிலோ வெள்ளை வெங்காயத்தின் விலை ரூ. 35 ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கிலோ சிவப்பு பருப்பின் புதிய விலை ரூ. 385, டின் மீன் 425 கிராம் புதிய விலை ரூ. 490 ஆகவும், ஒரு கிலோ வெங்காயத்தின் புதிய விலை ரூ. 190, ஒரு கிலோ கோதுமை மாவின் புதிய விலை ரூ. 250 ஆகவும், ஒரு கிலோ வெள்ளை வெங்காயத்தின் புதிய விலை ரூ. 460 ஆகும்.