உள்நாட்டு செய்தி
புகையிரத சேவைகள் ஸ்தம்பிதம்
டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு ரயில் சேவையை இயக்க இயலாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புகையிரத நிலையங்களில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன், ஓய்வு பெறவுள்ள ஊழியர்களின் ஓய்வு காலத்திற்கு முந்திய விடுப்பு காரணமாக சில புகையிரத நிலையங்களின் சேவைகள் ஏற்கனவே முடங்கியுள்ளதாக நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள 370 ரயில் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை 10,500 ஆகும். ஆனால் இந்த 370 நிலையங்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 19,382 ஆகும். தற்போது ரயில் நிலையங்களில் பணிபுரியும் 10,500 பேரில் 700 பேர் வரும் 31ம் தேதி ஓய்வு பெற உள்ளனர்.
இதன் காரணமாக இம்மாத இறுதிக்குள் புகையிரத சேவையில் பாரிய இடையூறுகள் ஏற்படக்கூடும் என புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.