உள்நாட்டு செய்தி
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
லங்கா சதொச நிறுவனம் ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 10 ரூபாவினாலும் பெரிய வெங்காயத்தின் விலை 16 ரூபாவினாலும் 425 கிராம் டின் மீன் டின் ஒன்றின் விலை 35 ரூபாவினாலும் குறைத்துள்ளது..
மேலும் ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசியின் புதிய விலை 215 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 199 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவைகளின் அடிப்படையில் 425 கிராம் மீன் டின் ஒன்றின் புதிய விலை 495 ரூபாவாக காணப்படுகின்றது